கடையநல்லூர் அருகே வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பசுமை பழப்பயிர் பெட்டகம்

கடையநல்லூர் அருகே வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பசுமை பழப்பயிர் பெட்டகம் வழங்கும் விழா நடந்தது.

Update: 2020-03-17 22:30 GMT
அச்சன்புதூர், 

கடையநல்லூர் அருகே வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பசுமை பழப்பயிர் பெட்டகம் வழங்கும் விழா நடந்தது.

பழப்பயிர் பெட்டகம் 

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைப்பகுதியில் வனத்துறை சார்பில் அகஸ்தியர் பயோ ஸ்பியர் திட்டத்தின் கீழ் பசுமை பழப்பயிர் பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் வனச்சரகர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வனவர்கள் லூமிக்ஸ், அருமைக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், அம்பலவாணன், பாத்திமா பிர்தவ்ஸ், பத்மாவதி, தங்கப்பாண்டியன், சவுந்தரராஜன், வேட்டை தடுப்பு காவலர்கள் ராக்குமுத்து, கணேசன், மாடசாமி, சுப்புராஜ் மற்றும் சிங்கிலிபட்டி, முத்துசாமியாபுரம், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த வனக்குழு தலைவர்கள் துரைசாமி பாண்டியன், முத்தையா, சுப்பையா, துரைப்பாண்டி, வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, உடையார்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் 

அப்போது வனத்துறையினர் பேசுகையில், “வனக்குழு மூலமாக சிறப்பு நலத்திட்ட உதவிகள் செயல்பட்டு வருகிறது. வனக்குழுவினர் தொடர்ந்து வனவிலங்குகள் மற்றும் வனங்களை பாதுகாத்து வரவேண்டும். வனக்குழுவின் மூலம் அரசினுடைய நலத்திட்ட உதவிகளை அனைத்தையும் பெற்று தருகிறோம். புதிதாக தொழில் தொடங்குவதற்கு அரசின் மூலம் மானியத்துடன் கடன் உதவிகளை பெற்று தருகிறோம். வனத்துறையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என அறிவுரை வழங்கினர்.

விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் மாங்கன்றுகள், எலுமிச்சை, கொய்யா, நெல்லி, பப்பாளி, நாவல், மாதுளை, மருதானி போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் 100–க்கும் மேற்பட்ட அனைத்து கிராம வனக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்