கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்டத்தில் 2,453 பள்ளிகள் மூடல்

கொரோனா வைரஸ்தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 2,453 பள்ளிகள் மூடப்பட்டன.

Update: 2020-03-17 22:30 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை வருகிற 31-ந் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 2,453 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. இதை மீறி யாராவது பள்ளிகளை திறந்துள்ளார்களா? என கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று நடைபெற இருந்த, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் தேசிய கற்றல் அடைவு குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சியும் ரத்து செய்யப்படுகிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு பொருட்கள்

அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு உணவு பொருட்களை அந்தந்த குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் படித்து வரும் குழந்தைகளின் பெற்றோர் அங்கு வந்து ஊட்டச்சத்து உணவுபொருட்களை வாங்கி சென்றனர்.

இதேபோல் சேலத்தில் உள்ள மற்ற அங்கன்வாடி மையங்களிலும் படித்து வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் அந்தந்த மையங்களுக்கு சென்று ஊட்டச்சத்து உணவு பொருட்களை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்