திருவள்ளூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

Update: 2020-03-17 22:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் ரே‌‌ஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கடனுதவி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 331 மனுக்களை அளித்தனர்.

அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இழப்பீட்டு தொகை

பின்னர் கலெக்டர் வருவாய் துறையின், சமூக பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000-க்கான காசோலைகளையும் வழங்கினார்.

புட்லூர் கிராமத்தைச் சேர்ந்த வேலவன், காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது வி‌‌ஷ வாயு தாக்கி இறந்தார். அவரது வாரிசுதாரரான நிரோ‌ஷா மற்றும் சிவகாமி ஆகியோருக்கு ரூ.14 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பார்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்