உபலோக் ஆயுக்தா நீதிபதிக்கு அதிகாரம் வழங்க சட்டசபையில் லோக்ஆயுக்தா சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

உபலோக்ஆயுக்தா நீதிபதிக்கு அதிகாரம் வழங்க சட்டசபையில் லோக்ஆயுக்தா சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

Update: 2020-03-17 22:51 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, கர்நாடக லோக்ஆயுக்தா சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

அவர் கூறுகையில், “கர்நாடக லோக்ஆயுக்தா சட்டத்தின்படி, லோக்ஆயுக்தா நீதிபதி இல்லாத நேரத்தில் அவரது பணியை வேறு யாரும் செய்ய முடியாது. அவரே நினைத்தாலும் மற்றவர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்க முடியாது. லோக்ஆயுக்தா நீதிபதி கருதினால், அரசுக்கு கடிதம் எழுதி, தான் பணியில் இல்லாதபோது தனக்குரிய அதிகாரத்தை உபலோக்ஆயுக்தா நீதிபதிக்கு வழங்குமாறு கூறலாம். அதற்காக இந்த லோக்ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

பல் இல்லாத அமைப்பு

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ்குமார், “லோக்ஆயுக்தா பல் இல்லாத அமைப்பாக உள்ளது. அந்த அமைப்புக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும். அதற்காக சட்ட திருத்த மசோதாவை அரசு கொண்டுவர வேண்டும். அதிக அதிகாரம் கொடுக்காமல் இருந்தால், அந்த அமைப்பு இருந்து என்ன பயன்?. எந்த நோக்கத்திற்காக அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

அதைத்தொடர்ந்து லோக்ஆயுக்தா சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்