பொதுஇடங்களில் ஒன்றுகூட வேண்டாம் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

பொதுஇடங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-03-22 23:13 GMT
புதுச்சேரி, 

கொரோனா வரைஸ் பரவலை தடுக்க மத்திய அரசின் உத்தரவின் பேரில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். பொதுமக்களுக்கு தலைவர்களும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அவ்வப்போது அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கினர்.

இந்தநிலையில்புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் இன்று (நேற்று) சுய ஊரடங்கு உத்தரவை நாம் முடித்துள்ளோம். ஊரடங்கு உத்தரவு முடிந்து விட்டது என்பதற்காக உடனடியாக கடை வீதிக்கு செல்லக்கூடாது. கூடுமான வரை நாம் சமூகத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும்.

அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே கடை களுக்கு செல்லலாம். அவ்வாறு செல்லும் போது குறிப்பிட்ட தூர இடைவெளியில் சமூகத்தை விட்டு விலகியே இருக்க வேண்டும். பொருட்களை வாங்கி முடித்த பின்னர் நாம் நேராக வீட்டிற்கு வந்து விட வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறவும் வேண்டாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்