கும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம் அதிகாரி தகவல்

கும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என பொதுமேலாளர் ஜெபராஜ் நவமணி கூறினார்.

Update: 2020-03-24 00:00 GMT
கும்பகோணம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 31-ந் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் வெளி மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

குறைந்த பயணிகள்

அதன்படி கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னைக்கு 90 பஸ்களும், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 210 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மேற்கண்ட தகவலை கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி கூறினார்.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 5 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆதலால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு முடிந்ததையடுத்து காலை 5 மணிக்கு மேல் குறைவான அளவில் தான் பஸ்கள் இயங்கின. இதனால் வெளியூர்களில் இருந்து டிரைவர்கள், நடத்துனர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர முடியவில்லை. குறைவான அளவில் பஸ்கள் இயங்கியதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்