வெளிநாடு-பிற மாநிலங்களில் இருந்து கடந்த 2 மாதத்தில் மதுரை வந்தவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் வினய் உத்தரவு

வெளிநாடு-பிற மாநிலங்களில் இருந்து கடந்த 2 மாதங்களில் மதுரை வந்தவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-03-23 23:00 GMT
மதுரை, 

கடந்த 2 மாதங்களில் மதுரை மாவட்டத்திற்கு வெளிநாடு, பிறமாநிலத்தில் இருந்து வந்திருப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்றவை இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதே வேளையில் கொரோனா அறிகுறி இருந்தாலும், அறிகுறிகள் இல்லைஎன்றாலும் தாங்களாகவே முன்வந்து பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்-1077, தொலைபேசி எண்-0452-2546160, செல்போன் எண்:- 9597176061 ஆகிய எண்களில் உடனே தெரியப்படுத்த வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கொரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை அணுகி உரிய பரிசோதனை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்