கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் உத்தரவை தயவு செய்து பின்பற்றுங்கள் மாநில மக்களுக்கு, நடிகர் சிவராஜ்குமார் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் உத்தரவை தயவு ெசய்து பின்பற்றுங்கள் என்று மாநில மக்களுக்கு, நடிகர் சிவராஜ்குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2020-03-24 23:00 GMT
பெங்களூரு, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் உத்தரவை தயவு ெசய்து பின்பற்றுங்கள் என்று மாநில மக்களுக்கு, நடிகர் சிவராஜ்குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

எடியூரப்பா அதிருப்தி

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி மக்கள் வெளியே நடமாடி வருகின்றனர்.

இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா தனது ஆதங்கத்ைத வெளிப்படுத்தினார்.

எனக்கும் வருத்தம்

இந்த நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் பேசியிருந்ததாவது:-

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் அரசு கூறும் வழிமுறைகளை மக்கள் யாரும் பின்பற்றுவது இல்லை. அரசு கூறும் வழிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கர்நாடகத்தில் நாளை(இன்று) யுகாதி பண்டிகையை மக்கள் தங்களது வீடுகளிலேயே இருந்து கொண்டாட வேண்டும். பண்டிகை வந்து விட்டது என்பதை நானும் அறிவேன். பண்டிகையை உற்சாகமாக கொண்டாட முடியாதது வருத்தம் தான். அந்த வருத்தம் எனக்கும் உள்ளது.

தயவு செய்து பின்பற்றுங்கள்

யுகாதி பண்டிகையை மாநில மக்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள். தேவையில்லாமல் வெளியே வந்து போலீசாரிடம் லத்தியால் அடி வாங்க வேண்டாம். நமது மாநில அரசு, போலீசாருக்கு மக்கள் தயவு செய்து தொந்தரவு கொடுக்க வேண்டாம். எப்போதும் சோப்பு போட்டு கையை கழுவுங்கள். இந்த வைரஸ் விரைவில் நீங்க வேண்டும் என்று கடவுளிடம் நாம் அனைவரும் கைகூப்பி வேண்டுவோம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் உத்தரவை மாநில மக்கள் தயவு செய்து பின்பற்றுங்கள்.

இவ்வாறு அவர் வீடியோவில் பேசி இருந்தார்.

மேலும் செய்திகள்