திருவாரூர் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு: 1,200 போலீசார் பாதுகாப்பு

144 தடை உத்தரவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-03-25 00:00 GMT
திருவாரூர்,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க 60 இடங்களில் நிலையான கண்காணிப்பு குழுக்கள், 35 மோட்டார் சைக்கிள் ரோந்து குழுக்கள், 4 நெடுஞ்சாலை ரோந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மருத்துவக்குழு

5 இடங்களில் மருத்துவக்குழுவுடன் கூடிய புற காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தவர்களின் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்கள் வாரியாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு ஏற்ப அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவுக்கும், போலீசாரின் நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடைகள் அடைப்பு

இந்த நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மாலை கடைகள் முன்பு திரண்டனர். மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. ரெயில் போக்குவரத்து இல்லாததால் ரெயில் நிலையத்தில் ஆட்கள் நுழைய தடை விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

திருமக்கோட்டையில் தடை உத்தரவையொட்டி அனைத்து கடைகளும் நேற்று மாலை அடைக்கப்பட்டு இருந்தன. காலையில் காய்கறி, மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்