சுகாதாரமற்ற நிலையில் செங்கல்பட்டு காய்கறி சந்தை - தொற்று நோய் பரவும் நிலை

சுகாதாரமற்ற நிலையில் செங்கல்பட்டு காய்கறி சந்தை செயல்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது.

Update: 2020-03-26 22:15 GMT
செங்கல்பட்டு,

கொரோனா வைரஸ் நோய் தொற்றை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மருந்துகள் உணவுகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவவை செங்கல்பட்டில் உள்ள பொதுமக்கள் முறையாக கடைபிடித்தாலும் அத்தியாவசிய பொருட்களான காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் முக கவசம், கையுறை ஏதுமின்றி அரசின் உத்தரவை துளிகூட கடைபிடிக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது.

மேலும் கையுறை கூட அணியாமல் சுகாதாரமற்ற முறையில் காய்கறிகளை செங்கல்பட்டு காய்கறி சந்தையில் விற்பனை செய்வதை நகராட்சி நிர்வாகத்தினர் முறைபடுத்தி தொற்றுநோய் பரவுவதில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்