கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர்- அரசு கொறடா ஆய்வு

அரியலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர், அரசு கொறடா ஆய்வு செய்தார்.

Update: 2020-03-26 21:30 GMT
அரியலூர், 

அரியலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாமரை ராஜேந்திரன் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களாகிய நாமும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கூட்டம் சேராத வகையில், தங்களையே தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் ஏற்படாமல் தங்களையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும், என்றார். கலெக்டர் ரத்னா கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக உள்ள உதவிக்கு யாரும் இல்லாத முதியவர்கள் தங்களுக்கு மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04329-228709 மற்றும் 99523 36840 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அருகில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் என்று அறிந்தால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்