கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளி மைதானத்துக்கு மாறிய காய்கறி கடைகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளி மைதானங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டது.

Update: 2020-03-27 22:30 GMT
தாம்பரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனினும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் கூடியதால் கொரோனா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் காய்கறி மார்க்கெட்டை போலீசார் மூடஉத்தரவிட்டனர். இதனால் 2 நாட்களாக மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள் இயங்கவில்லை.

இதையடுத்து நோய் பரவலை தடுக்க காய்கறி கடைகளை பிரித்து மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளி மைதானங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டது.

தாம்பரம் காந்தி சாலையில் உள்ள பள்ளி மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளை தாம்பரம் நகராட்சி கமிஷனர் கருப்பையா ராஜா ஆய்வு செய்தார். அப்போது அவர், அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை தாம்பரத்தில் காய்கறி கடைகள் திறந்த வெளியில் பள்ளி மைதானத்தில் செயல்படும் என்றார்.

மேலும் செய்திகள்