ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு

ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2020-03-29 22:15 GMT
பள்ளிப்பட்டு, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசாரும், வருவாய்த்துறையினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் சிலர் தடையை மீறி இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றியபடி உள்ளனர்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் பள்ளிப்பட்டு போலீசார், பள்ளிப்பட்டு நகரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், 15 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பகுதியில் 5 பேர் மீதும், ஆர்.கே.பேட்டை தாலுகாவில் 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், 19 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருக்கழுக்குன்றம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மிறி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்