கண்டனூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

கண்டனூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-03-29 22:45 GMT
சிவகங்கை, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கண்டனூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் வீடு வீடாகச் சென்று கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், கடைக்கு வருபவர்கள் மற்றவர்களிடமிருந்து 1 மீட்டர் இடைவெளி விட்டு நின்று கொண்டு பொருட்கள் வாங்க வேண்டும் எனவும் ஆட்டோவில் தெருத்தெருவாக சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இப்பணிகளில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், சிறப்பு பாதுகாப்பு உடை, முககவசம், தலைக்கவசம், கையுறை மற்றும் காலுறை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு தெருக்கள் மற்றும் கடைப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வாருகால் ஓரங்களில் பிளச்சிங் பவுடரை தூவி வருகின்றனர். மேலும் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்