அத்தியாவசிய பொருட்களை வாகனங்களில் கொண்டுசெல்ல அனுமதி பெறவேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

அத்தியாவசிய பொருட்களை வாகனங்களில் கொண்டுசெல்ல அனுமதி பெறவேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:–

Update: 2020-03-30 21:30 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் முன் எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 24–ந் தேதி முதல் வருகிற 14–ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை தனியார் வாகனங்களில் கொண்டு செல்ல அனுமதி பெறுவதற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகலத்தில் விண்ணப்பம் செய்து அனுமதி பெறலாம். 

இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 9445008137, 9942316557, 9500900788 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்