ராமநாதபுரத்தில் அரசின் நிவாரண தொகை வினியோகம் - எம்.எல்.ஏ. வழங்கினார்

ராமநாதபுரத்தில் அரசின் நிவாரண தொகையை எம்.எல்.ஏ. மணிகண்டன் வழங்கினார்.

Update: 2020-04-02 21:30 GMT
ராமநாதபுரம், 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நேற்று முதல் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. இந்த பணிகளை ராமநாதபுரம் எம்.எல்.ஏ. மணிகண்டன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது சின்னக்கடை தெரு, அகில் கிடங்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். எம்.எல்.ஏ.வுடன் நகர் பொருளாளர் ஜெயக்குமார், தஞ்சி சுரேஷ், சசிக்குமார், ஆதில் அமீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்