சுவாமிமலை அருகே, 100 பேருக்கு 10 கிலோ அரிசி - அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்

சுவாமிமலை அருகே 100 பேருக்கு 10 கிலோ அரிசியை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

Update: 2020-04-05 05:24 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி ஊராட்சிக்கு உட்பட்ட ஏழுமாந்திடல் கிராமத்தில் நரிக்குறவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த மக்கள் வீட்டில் வருமானமின்றி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு தனது சொந்த நிதியில் இருந்து 100 பேருக்கு 10 கிலோ அரிசி வழங்க முடிவு செய்தார். இதன்படி ஏழுமாந்திடல் கிராமத்தில் 100 பேருக்கு 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அரிசி பைகளை நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கும்பகோணம் பால் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில், ஒன்றிய கவுன்சிலர் சுப்புஅறிவழகன், அக்ரோ துணைத்தலைவர் சண்முகம், கூட்டுறவு சங்க இயக்குனர் சிவஞானம், ஒப்பந்தக்காரர் சுப்புமதியழகன், அதிமுக கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்