பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் கலெக்டர் சி.கதிரவன் உத்தரவு

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

Update: 2020-04-16 21:45 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நலன் கருதி கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த சூழலில், உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் பொதுமக்கள் 9677397600, 9585386997 என்ற எண்களுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்–அப் மூலம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்