சிவகிரி அருகே, வனப்பகுதிக்குள் நுழைய முயற்சி; 12 பேருக்கு அபராதம்

சிவகிரி அருகே வனப்பகுதிக்குள் நுழைய முயற்சி செய்த 12 பேருக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2020-04-27 22:15 GMT
சிவகிரி. 

சிவகிரி வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனவர் முருகன் மற்றும் வனச்சரக பணியாளர்கள் சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவியாறு பீட் தேவிப்பட்டினம் சரக வனப்பகுதி மற்றும் ஏனைய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது தேவிப்பட்டினத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள தவம் பெற்ற நாயகி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக எவ்வித அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைய முயன்ற 12 பேரை பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேவிப்பட்டினம் மாதா கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 42), செல்வராஜ் (35), கோவிந்தராஜ் மனைவி இருள்பாக்கியம் (30), காளிராஜ் மனைவி மகாலட்சுமி (30), மணல் மேட்டுத்தெரு காளிராஜ் (40), காமராஜ் தெரு ஆனந்தராஜ் (30), ஜார்ஜ் (38,) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சொக்கநாதன்புத்தூர் முப்பிடாதி அம்மன் கோவில் தெரு மணிகண்டன் (30), காமராஜர் தெரு முத்துக்குமார் (38), முத்துக்குமார் மனைவி பாண்டீஸ்வரி (30), வீர சின்னம்மன் கோவில் தெரு போத்திராஜ் (34), குலாளர் தெரு போத்திராஜ் மனைவி முருகேஸ்வரி (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் சிவகிரி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். 

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைய முயன்ற குற்றத்திற்காக 12 பேருக்கும் தலா ரூ.2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்