முண்டியம்பாக்கத்திற்கு சரக்கு ரெயிலில் 3,600 டன் பச்சரிசி வந்தது

முண்டியம்பாக்கத்திற்கு சரக்கு ரெயிலில் 3,600 டன் பச்சரிசி வந்தது.

Update: 2020-04-29 01:25 GMT
விக்கிரவாண்டி,

அரியானா மாநிலம் டொகானா பகுதியில் இருந்து 3,600 டன் பச்சரிசியை இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்தது. பின்னர் அந்த அரிசி 58 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. அரிசி மூட்டை ஏற்றி வந்த சரக்கு ரெயில் பெட்டிகள் முழுவதிலும் இந்திய உணவுக்கழக அதிகாரிகள் முன்னிலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அந்த அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு விழுப்புரம் அருகே குண்டலப்புலியூரில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்