ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.

Update: 2020-05-01 04:19 GMT
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச அழைப்பு எண் மற்றும் பேச்சுத்திறன், செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வாட்ஸ் அப் வீடியோ கால் எண் ஆகியவை மூலம் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு, தேவைகளும் கேட்டு அறிந்து அரிசி, உணவு, மளிகைப்பொருட்கள், மருந்து பொருட்கள் மற்றும் பிற உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் கவனத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்கும் விதமாக முகக் கவசம், கையுறைகள், கிருமி நாசினி ஆகியவை உள்பட சிறப்பு உதவி பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான கால் உறைகள், கையுறைகள், முட்டிகளில் மாட்டும் உறைகள் ஆகியவற்றை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்