ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1,800 பேருக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் வழங்கினார்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1800 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

Update: 2020-05-01 22:23 GMT
மயிலம்,

மயிலம் அருகே உள்ள சித்தணி கிராமத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1,800 பேருக்கு மயிலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மயிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.டி.சேவல் சேகரன் தலைமை தாங்கினார். மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 1,800 பேருக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறிகளை நிவாரண உதவியாக வழங்கினார். இதில் மயிலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச்செல்வன், முன்னாள் மாவட்ட கவுன் சிலர் பி.எஸ்.பி.நடராஜன், சித்தணி கிளை செயலாளர்கள் சாமி செல்வராஜ், சந்திரசேகர், செல்வராஜ், ஊராட்சி செயலாளர்கள் வீடூர் மனோகரன் சித்தணி முருகன், நெடிமொழியனூர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜாராம், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காணை தே.மு.தி.க.

காணை கிராமத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஏழை-எளிய மக்களுக்கு காணை ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் கலந்துகொண்டு 100 பேருக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை நிவாரண உதவியாக வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் கோழிப்பட்டு குமார், ஒன்றிய துணை செயலாளர் மதுசூதனன், மாவட்ட நிர்வாகிகள் செல்வக்குமார், ராஜகோபால், மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சிவபாலன், ஊராட்சி செயலாளர் சின்னமணி, கிளை செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் சாலாமேடு

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ் கலந்துகொண்டு 100 குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகளை வழங்கினார். இதில் மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் பிரஸ் குமரன், வார்டு செயலாளர்கள் துரைபிரகாஷ், விஜயகுமார், நிர்வாகிகள் மின்னல்சவுக், கவுதமன், கலை, நாடிமுத்து, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்