வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் தற்காலிக காவலர் பயிற்சி மையம்

வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் தற்காலிக காவலர் பயிற்சி மையம் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு.

Update: 2020-05-02 04:47 GMT
வேலூர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் கோட்டை பூட்டப்பட்டது. அதனால் கோட்டை வளாகத்தில் இயங்கி வந்த காவலர் பயிற்சி மையம், அரசு அருங்காட்சியகம் உள்ளிட்டவை மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தேர்வான 192 பேருக்கு வேலூர் காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதற்காக நேதாஜி விளையாட்டு அரங்கில் தற்காலிக காவலர் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

காவலர் பயிற்சி மையத்துக்கு வரும் 192 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். பின்னர் அவர்களுக்கு அடிப்படை காவலர் பயிற்சி அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து அவர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்கு பின்னர் 6 மாத பயிற்சி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்