கடலூர் தற்காலிக காவலர் பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு பயிற்சி

கடலூர் தற்காலிக காவலர் பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு பயிற்சி சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

Update: 2020-05-06 22:08 GMT
கடலூர்,

கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு அடிப்படை பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தொடங்கி வைத்து பேசுகையில், காவலர் குடும்பத்தில் புதிதாக சேர்ந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டுக்கு, நாடு காவல்துறையில் சீருடை மற்றும் பயிற்சிகள் மாறுபட்டு இருந்தாலும், அனைத்து நாட்டு காவல்துறையிலும் மிக முக்கியமாக கடைபிடிப்பது ஒழுக்கம் மட்டுமே. ஆகவே பயிற்சி காவலர்கள் கட்டாயம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். பயிற்சி பெறும் பெண் போலீசார் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளனர். இதில் காவலர் பயிற்சி பள்ளியின் துணை முதல்வர் சுந்தரம், முதன்மை சட்ட போதகர் ஈஸ்வரி, முதன்மை கவாத்து போதகர் விஜயகுமார், உதவி சட்ட போதகர்கள், உதவி கவாத்து போதகர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்