குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய கலெக்டர்

சிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு கலெக்டர் சார்பாக பரிந்துரை செய்யப்பட்டது.

Update: 2020-05-06 23:30 GMT
மானாமதுரை, 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் மாரி (வயது28). இவருடைய மனைவி திவ்யா (22). இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் பயனில்லாத நிலையில் மேலும் ரூ. 2 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்ததால் கூலி வேலை செய்யும் மாரி வேறு வழியின்றி குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். 

இந்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தையை முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் மானாமதுரை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நாகராஜன், சமூக ஆர்வலர்கள் பாலசுப்ரமணியன், சங்கரசுப்ரமணியன் உள்ளிட்டோர் உதவியதன் பேரில் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்