என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்ததால் பயங்கர தீ விபத்து 8 தொழிலாளர்கள் காயம்

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் கொதிகலன் வெடித் ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் காய மடைந்தனர்.

Update: 2020-05-07 22:16 GMT
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 6-வது அலகில் உள்ள கொதி கலனில் ஏற்பட்ட உயரழுத்தம் காரணமாக அந்த கொதிகலன் பயங்கர சத்தத் துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவ தும் புகை மண்டலமாக காட்சி யளித்தது.

8 பேர் காயம்

இதற்கிடையே கொதி கலனில் இருந்த நீராவி சிதறியதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன், ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன் பாலமுருகன் ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்த என்.எல்.சி. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் விரைந்து வந்து காயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக என்.எல்.சி. மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த என்.எல்.சி. மனித வளத்துறை இயக்குனர் விக்ரமன், மின்துறை இயக்குனர் ஷாஜி ஜான் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சி.ஐ. டி.யு., தொ.மு.ச. தலைமை நிர்வாகிகள், பாதிக் கப்பட்ட தொழிலாளர்களின் குடும் பத்தினர், சகதொழிலா ளர்களும் மருத்து வமனைக்கு திரண்டு வந்தனர்.

கடந்த ஆண்டும் விபத்து

இதற்கிடையே காய மடைந்த தொழிலாளர் களுக்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் கொதிகலன் வெடித்த இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க என்.எல்.சி. தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் என்.எல்.சி.யில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. இதுகுறித்து தொ.மு.ச. பொதுச் செயலாளர் சுகுமார் கூறுகை யில், கடந்த ஆண்டும் இதே போன்று இதே அலகில் விபத்து ஏற் பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டும் விபத்து ஏற் பட்டுள்ளது. எனவே இது போன்ற விபத்துகளை தடுக்க என்.எல்.சி. நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்