திங்கள்நகரில் காங்கிரசார் போராட்டத்தால் மதுக்கடை திறக்கப்படவில்லை மதுபிரியர்கள் ஏமாற்றம்

ங்கள்நகரில் காங்கிரசாரின் திடீர் போராட்டத்தால் மதுக்கடை திறக்கப்படவில்லை. இதனால் மதுபிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2020-05-08 01:50 GMT
அழகியமண்டபம்,

திங்கள்நகரில் காங்கிரசாரின் திடீர் போராட்டத்தால் மதுக்கடை திறக்கப்படவில்லை. இதனால் மதுபிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

கொரோனா ஊரடங்குக்கு இடையே தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இதேபோல் குமரி மாவட்டத்திலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் சார்பில் திங்கள்நகர் பகுதியில் குளச்சல் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடையை திறப்பதற்கு முன்பு அங்கு காங்கிரசார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பீட்டர்தாஸ், ஜார்ஜ் எட்வின், ஆன்றோ அலெக்ஸ், தேவ், ஜெயனேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஏற்கனவே இந்த கடையை திறக்கக்கூடாது என போராட்டம் நடத்தினோம், ஆனால் அதனை மீறி கடையை அதிகாரிகள் திறந்து விட்டனர்.

திறக்கப்படவில்லை

தற்போது இந்த மதுக்கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரசார் தெரிவித்தனர். காங்கிரசாரின் எதிர்ப்பை தொடர்ந்து மதுக்கடையை திறக்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டது. இதில், சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தின் காரணமாக திங்கள்நகர் பகுதியில் நேற்று மதுக்கடை திறக்கப்படவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், அந்த பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்