வாணியம்பாடி நகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் நிலோபர்கபில் வழங்கினார்

வாணியம்பாடி நகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் நிலோபர்கபில் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

Update: 2020-05-10 00:20 GMT
வாணியம்பாடி,

கொரானா வைரஸ் காரணமாக வாணியம்பாடி புதூரில் உள்ள நகராட்சி தொடக்க பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மங்கையர்க்கரசி, ஆசிரியர்கள் விஜயா, ஞானசேகரன் ஆகியோர் தங்களது சேமிப்பு பணத்தில் இருந்து, பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை மங்கையர்க்கரசி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன், நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் கலந்துகொண்டு 111 மாணவ, மாணவிகளுக்கு மளிகை மற்றும் உணவுப்பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் காயத்திரி சுப்பிரமணி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகர அ.தி.மு.க. செயலாளர் சதாசிவம், அவைத்தலைவர் சுபான், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சரிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்