சேமிப்பு பணத்தில் வீடு, வீடாக சென்று நிவாரண பொருட்கள் வழங்கிய அரசு பள்ளி மாணவிகள்

சேமிப்பு பணத்தில் வீடு, வீடாக சென்று நிவாரண பொருட்கள் வழங்கிய அரசு பள்ளி மாணவிகள்.

Update: 2020-05-10 03:48 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் பாரத சாரண சாரணிய இயக்க மாணவிகள் சாரண ஆசிரியர் காந்திமதி தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். தாசன்கொட்டாய், அண்ணாநகர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று முககவசம் அணிவதன் அவசியம், கிருமிநாசினி கொண்டு கைகழுவும் முறை, சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். இவர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை கொண்டு வாங்கிய முககவசம் மற்றும் நிவாரண பொருட்களையும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்