கொங்கணாபுரம் ஒன்றியத்தில், அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளியவர்களுக்கு விலையில்லா அரிசி

கொங்கணாபுரம் ஒன்றியத்தில், அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளியவர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டது.

Update: 2020-05-11 04:59 GMT
சேலம்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் சொந்த செலவில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 90 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா அரிசி நிவாரண பொருளாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள் கடந்த 2 நாட்களாக வழங்கி வருகின்றனர்.

இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் கச்சுபள்ளி, கரட்டூர், வெள்ளாளபுரம் ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டது.

கொங்கணாபுரம்

இரண்டாவது நாளாக நேற்று எடப்பாடி தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எட்டிகுட்டமேடு, கோரணம்பட்டி, தங்காயூர் ஆகிய பகுதிகளில் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி, ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருமான ராஜேந்திரன், சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் செல்லதுரை உள்ளிட்டோர் வழங்கினார்கள்.

தொடர்ந்து எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட 90 ஆயிரம் குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்