திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: டாக்டர்கள் தகவல்

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

Update: 2020-05-14 23:15 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதனால் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். 112 பேர் குணமடைந்த நிலையில், 2 பேர் மட்டும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். 114 பேரும் குணமடைந்த நிலையில் தற்போது திருப்பூர் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இல்லாதது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:- திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 2 பேர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவர்களது, சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். இதற்கான முடிவு வந்தது. இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்