மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.26 கோடி கடன் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.26 கோடி கடன் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

Update: 2020-05-18 01:37 GMT
கடலூர்,

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் பீச் ரோட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 804 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.26 கோடியே 97 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார்

இதைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 54 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் வீதம் 7 ஆயிரத்து 450 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் குபேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், துணைப்பதிவாளர் சண்முகம், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பலராமன், உதவி பொது மேலாளர்கள் இளங்கோ, அருள், முன்னாள் நகர் மன்ற தலைவர் குமரன், முன்னாள் துணைத்தலைவர் சேவல் குமார், ஒன்றியக்குழு தலைவர் தெய்வபக்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்