அரசின் நிவாரணத்தொகை பெற தபால் வங்கியில் கட்டணமின்றி கணக்கு தொடங்கலாம்

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-05-21 01:17 GMT
தர்மபுரி,

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கொரோனா நிவாரண உதவித்தொகை வங்கி கணக்கு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு இல்லாத தொழிலாளர்களுக்கு அஞ்சல் துறை மூலமாக நலவாரிய கணக்கு தொடங்கி அதன்மூலம் நிவாரணத்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி அஞ்சல் துறையும் இந்திய தபால் வங்கி மூலம் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தொடக்க கட்டணம் இல்லாமல் நலவாரிய வங்கி கணக்கு தொடங்க ஒப்புதல் அளித்து உள்ளது. அதன்படி நலவாரியத்தில் பதிவு பெற்று புதுப்பித்தல் உள்ள மற்றும் நிவாரணத்தொகை எதுவும் கிடைக்காத தொழிலாளர்கள் தங்கள் நலவாரிய அட்டை விவரம், ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணுடன் அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று இந்திய தபால் வங்கியில் கட்டணம் இல்லாமல் கணக்கு தொடங்கலாம். 

இந்த திட்டம் மூலம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்