திண்டுக்கல்லில் பலத்த காற்றுடன் மழை

திண்டுக்கல்லில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Update: 2020-05-21 02:02 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. இதற்கிடையே மதியத்துக்கு பின்னர் வானில் மேகங்கள் திரண்டன. பின்னர் மாலை 4 மணி அளவில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. இதனால் திண்டுக்கல்லில் வெப்பம் குறைந்து இதமான குளிர் நிலவியது. மேலும் பலத்த காற்று வீசியதால் நகரில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதில் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு நின்ற மரம் முறிந்து விழுந்தது. மேலும் வீடுகளில் மேற்கூரைகள் பறந்தன. இதனால் மின்சார வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. காற்று மற்றும் மழை ஓய்ந்த பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

இதேபோல் கொடைக்கானல் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று காலை முதல் வெயில் அடித்தது. பின்னர் பிற்பகலில் மேகமூட்டம் சூழ்ந்து ரம்மியமான காலநிலை நிலவியது. அதனை தொடர்ந்து பகல் 2.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்