முறைகேடாக பயன்படுத்த முயற்சி: 310 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது

முறைகேடாக பயன்படுத்த முயன்ற 310 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

Update: 2020-05-21 05:48 GMT
புதுக்கோட்டை, 

முறைகேடாக பயன்படுத்த முயன்ற 310 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

கண்காணிப்பு

புதுக்கோட்டையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பொதுவினியோக திட்ட பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் பறக்கும்படை தாசில்தார் தமிழ்மணி தலைமையில் அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கணேஷ்நகர் போலீஸ் நிலையம் அருகே ஒரு ஆட்டோவில் மூட்டைகள் அடுக்கி வைத்து கொண்டு செல்லப்பட்டதை கண்டனர். இதையடுத்து அந்த ஆட் டோவை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசிகள் மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை முறைகேடாக பயன்படுத்த முயன்றது தெரியவந்தது. கீழ 4-ம் வீதியை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 45) என்பவர் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதனை முறுக்கு மாவிற்காக பயன்படுத்த இருந்தது தெரிந்தது.

2 பேர் கைது

இதையடுத்து முத்துலட்சுமி யையும், ஆட்டோ டிரைவர் முகமது (27) ஆகியோரை பிடித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 310 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப் பட்டதாக பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்