‘முக கவசம் அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ளங்கள்’ ; பொதுமக்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-05-22 06:20 GMT
கடலூர், 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். கொரோனா தடுப்பு பணி அலுவலர் சுப்பிரமணியன், கூடுதல் காவல்துறை இயக்குனர் வினித் வான்கடே, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், கலெக்டர் அன்புசெல்வன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம், வட்டம், கிராமம் அளவில் அக்குழுக்கள் நோய் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இனி வரும் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிவதை பொதுமக்கள் வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார். 

கூட்டத்தில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்- கலெக் டர்கள் விசுமகாஜன் (சிதம்பரம்), பிரவின்குமார் (விருத்தாசலம்), கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்