கோவில்பட்டியில் 800 பேருக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டியில் 800 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

Update: 2020-05-25 22:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் ஸ்டாலின் காலனியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வசிக்கும் 200 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தன்னார்வலர்களிடம் வழங்கினார். அவற்றை பெற்று கொண்ட தன்னார்வலர்கள், தனிமை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வழங்கினர்.

தொடர்ந்து கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பந்தல் தொழிலாளர்கள், நகை பட்டறை தொழிலாளர்கள் உள்ளிட்ட 600 ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, நகரசபை ஆணையாளர் ராஜாராம், சுகாதார அலுவலர் இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்