மராட்டியத்தில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா தொற்று 89 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 89 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2020-06-01 01:16 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 487 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67 ஆயிரத்து 655 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மேலும் 89 பேர் வைரஸ் ேநாய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 286 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 29 ஆயிரத்து 329 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனா்.

மும்பையை பொறுத்தவரை புதிதாக 1,244 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆயிரத்து 686 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல புதிதாக 52 பேர் பலியானார்கள். இதுவரை மும்பையில் 1,279 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

இதேபோல தானே மாநகராட்சியில் 3 ஆயிரத்து 721 பேரும், நவிமும்பை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 673 பேரும், கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் 1,318 பேரும், வசாய் விரார் மாநகராட்சியில் 874 பேரும், பன்வெல் மாநகராட்சியில் 499 பேரும், புனே மாநகராட்சியில் 6 ஆயிரத்து 904 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்