மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி; அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வேப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜி (வயது 52), இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் கிராமத்தை சேர்ந்த சிறுமி மோனிசா (7) ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

Update: 2020-06-02 02:19 GMT
தர்மபுரி,

பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இவர்களின் குடும்பங்களுக்கு  தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சிறுமி உள்ளிட்ட 2 பேரின் குடும்பத்திற்கும் காசோலைகளை வழங்கினார்.

அப்போது அமைச்சரிடம் தர்மபுரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்திற்கு நிதியாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை சங்க கவுரவ செயலாளர் ஜப்பார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி, கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்