சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

Update: 2020-06-19 23:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்து, தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சமூகசேவை நிறுவனத்தை கவுரவிக்கும் வகையில், சுதந்திரதின விழா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த சமூக சேவை நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகராக இருத்தல் வேண்டும். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் 1 பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரரின் கருத்துரு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை ‘மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கோரம்பள்ளம், தொலைபேசி எண்: 0461-2325606’ என்ற முகவரிக்கு வருகிற 24-ந் தேதிக்குள் அனுப்பி, விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்