பெண்களுக்கான சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

Update: 2020-06-24 04:45 GMT
அரியலூர், 

வரும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று பெண்களுக்கான சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். சமூகநலனை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்ட சமூக சேவகர் விண்ணப்பிக்கலாம். பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் சமூக சேவை நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் ஒரு பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடனும் அனுப்ப வேண்டும். அதற்கான விண்ணப்பம் நாளை (வியாழக்கிழமைக்குள்) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்