கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகை கலெக்டர் கிரண்குராலா தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது என்று கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-26 01:37 GMT
கள்ளக்குறிச்சி,

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்றும், இந்த உதவித்தொகை அவரவர் வீட்டிலேயே நேரில் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஆதார் அட்டை

அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது தேசிய அடையாள அட்டையின்படி அவர்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வருகிற 29- ந்தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் நிவராண தொகை ரூ.1000 வழங்கப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேசிய அடையாள அட்டையின் மொத்த பக்கங்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருந்து நிவாரணத்தொகை வழங்கும் அலுவலரிடம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்