ரூ.25 லட்சத்தில் சின்னதாராபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்

ரூ.25 லட்சத்தில் சின்னதாராபுரம் வாய்க்கால் தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2020-06-26 23:14 GMT
கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட சின்னதாராபுரம் வாய்க்காலில், ரூ.25 லட்சத்தில் தூர்வாரி, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மேற்கண்ட பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், நடப்பாண்டில், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 10 பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில், சின்னதாராபுரம் வாய்க்கால் ரூ.25 லட்சத்தில் தூர்வாரப்பட்டு, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,877 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். இந்த பணிகள் சிறுதாறை வாய்க்கால் நீர்ப்பாசன விவசாயிகள் நல சங்கம் மூலம் நடத்தப்படவுள்ளது என்றார். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதி பொதுமக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் பொடி வழங்கி, அவற்றை எப்படி காய்ச்ச வேண்டும், எவ்வளவு பருகவேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தார். 

மேலும் செய்திகள்