குமாரபாளையம் தாசில்தார் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் ஆய்வு

குமாரபாளையம் தாசில்தார் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் தங்கமணி ஆய்வு.

Update: 2020-06-27 01:47 GMT
குமாரபாளையம்,

குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் அறை, தாசில்தார் அலுவலக பிரிவு, சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, தேர்தல் பிரிவு, நிலஅளவை பிரிவு ஆகிய அலுவலகங்கள் ரூ.2.61 கோடியில் கட்டப்படுகிறது. இதில் தரைத்தளத்தில் வாகனகங்கள் நிறுத்தவும், முதல் மற்றும் 2-ம் தளத்தில் அலுவலகங்கள் செயல்படும் வகையிலும், குடிநீர் வசதி, ஒவ்வொரு தளத்திலும் கழிப்பிட வசதிகளுடன் கட்டப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தாசில்தார் உடனுக்குடன் பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கைகளை வழங்கி, பாதுகாப்பான இடங்களில் பொதுமக்களை தங்கவைத்து பாதுகாப்பு அளித்திடும் வகையில் இந்த அலுவலகமானது ஆற்றோரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம் மற்றும் தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மெகராஜ், தாசில்தார் தங்கம், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்