திருவோணம் அருகே சேதமடைந்த பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா? கிராமமக்கள் எதிர்பார்ப்பு

திருவோணம் அருகே சேதமடைந்த பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-07-03 03:09 GMT
ஒரத்தநாடு, 

திருவோணம் ஒன்றியம் காடுவெட்டிவிடுதி ஊராட்சியை சேர்ந்த பள்ளாத்தான்மனை கிராம மக்களின் சுடுகாடு செல்லும் சாலை மேம்பாடு செய்யப்பட்டு, அந்த சாலையில் குளத்து வாய்க்காலின் குறுக்கே ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் செலவில் புதிதாக பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் தடுப்பு சுவரில் வெடிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் இந்த பாலம் சேதமடைந்து ஆபத்து ஏற்படுமோ? என்று கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பாலம் கட்டும் பணியினை மேற்பார்வை செய்த அதிகாரிகள் அலட்சியத்தோடு செயல்பட்டதின் காரணமாகவே பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து விட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சேதமடைந்துள்ள பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளாத்தான்மனை கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்