நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய அலுவலர்கள் பெரம்பலூர் வட்டார மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-03 06:01 GMT
பெரம்பலூர், 

நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், இதற்காக நாளை (சனிக்கிழமை) முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடவுள்ள நிலக்கரி சுரங்க தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் நேற்று பெரம்பலூர் வட்டார மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினர். மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், நிலக்கரி சுரங்கங்களை மத்திய அரசானது தனியார் மயமாக்க உத்தரவிட்டுள்ளதால், அதன்மூலம் தனியாருக்கு சொந்தமான நிலக்கரியை மின்சாரத்திற்காக அரசு வாங்கும் போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது வரும். இதனால் மின்சார வாரியம் நஷ்டம் அடையும். எனவே மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்