சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்துவரும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தஞ்சை வருகை புதிய கோர்ட்டு வளாகத்தை பார்வையிட்டு மரக்கன்று நட்டார்

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வரும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் நேற்று தஞ்சை வந்தார். அவர் புதிய கோர்ட்டு வளாகத்தை பார்வையிட்டு மரக்கன்று நட்டு வைத்தார்.

Update: 2020-07-05 04:47 GMT
தஞ்சாவூர்,

மதுரை ஐகோர்ட்டு கிளையின் நீதிபதி பி.என்.பிரகாஷ். இவர் சாத்தான்குளத்தில் போலீசாரால் சித்ரவதைக்குள்ளாகி மரணம் அடைந்த தந்தை-மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நீதிபதி பிரகாஷ் நேற்று மதுரையில் இருந்து கார் மூலம் தஞ்சை வந்தார்.

தஞ்சை வந்த அவரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி சுதா மற்றும் நீதிபதிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன், வக்கீல் சங்க தலைவர் குமரவேல், செயலாளர் கீர்த்திராஜ், தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல்கள் சங்க துணைத்தலைவர் வேலுகார்த்திகேயன், அரசு வக்கீல் மனோகரன் மற்றும் பலர் வரவேற்றனர்.

மரக்கன்று நட்டார்

பின்னர் தரைதளத்தில் உள்ள நீதிமன்றங்கள், ஆவணங்கள் வைப்பறை ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் முதல்தளம் மற்றும் 2-வது தளத்திற்கும் சென்று பார்வையிட்டார். பின்னர் கோர்ட்டு வளாகத்தில் நீதிபதிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து புதிய கட்டிட வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் முன்பு மரக்கன்றை அவர் நட்டு வைத்தார். பின்னர் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கும் சென்று பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்