மாதவரம் கொரோனா பரிசோதனை நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு

சென்னையை அடுத்த மாதவரம் மண்டலத்தில் இதுவரை 2,049 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2020-07-08 22:00 GMT
செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் மண்டலத்தில் இதுவரை 2,049 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் புழல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனை நிலையத்தை நேற்று அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். மேலும் மாதவரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதில் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., மாதவரம் மண்டல அலுவலர் தேவேந்திரன், செயற்பொறியாளர் ராமமூர்த்தி, சுகாதார அலுவலர் பிரபாவதி மீனாட்சிசுந்தரம், மண்டல கூடுதல் பொறியாளர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்