திருப்பூர் மாவட்டத்தில் 3,082 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; 230 பேர் புதிதாக சேர்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 24 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மாவட்டத்தில் 288 ஆக உயர்ந்துள்ளது. 130 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Update: 2020-07-10 22:31 GMT

திருப்பூர்,

 கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்களின் சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதுபோல் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று மட்டும் 230 பேர் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு அதன்பிறகு விடுவிக்கப்படுகிறார்கள். அவ்வாறு நேற்று 307 பேர் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 3 ஆயிரத்து 82 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். நேற்று மட்டும் 801 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்