கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,184 ஆக உயர்ந்தது.

Update: 2020-07-19 05:41 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1,462 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 280 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

இவர்களில் 25 நபர்கள் சென்னை, கோவை, சேலம் தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்